களபூமி பிரித்தானியா நலன்புரிச் சங்கத்தால் சாலையோர ஆபத்துக்கள் அகற்றப்பட்டது! இ.போ.ச நன்றி பாராட்டு!
கரைநகர் சாலை வளாகத்தில் இருந்த ஆபத்தான மரங்கள், கிளைகள் JCB மூலம் அகற்றப்பட்டதற்கும், சோலார் மின்கம்பங்கள் பொருத்தப்பட்டதற்கும் இ.போ.ச கரைநகர் பிரிவு நன்றி தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபை, கரைநகர் சாலைப் பிரிவு (இ.போ.ச) அனுப்பியுள்ள கடிதத்தின்படி, சாலை வளாகத்தில் காணப்பட்ட ஆபத்தான முள் மரங்களும் வடிகளும் JCB வாகனம் மூலம் அகற்றப்பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இதனுடன், சாலை வளாகத்திற்குள் சோலார் மின்கம்பங்கள் பொருத்தப்பட்டமைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு பொருத்தந்தந்த களபூமி பிரித்தானியா நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா) மற்றும் கரைநகர் சாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு இ.போ.ச (வ) கரைநகர் பிரிவு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு இணைப்புப் பாலமாக இருந்து செயற்பட்ட சமூக செயற்பாட்டாளர் திரு. சுப்பிரமணியம் குருபரன் அவர்களுக்கும் சிறப்பு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கடிதம் 2026.07.17 அன்று, சாலைமுகாமையாளர் திரு. த.சிவகுமார் அவர்களால் கையொப்பமிடப்பட்டு களூமி பிரித்தானியா நலன்புரிச் சங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.


