செய்திகள்

காரைநகரில் கொள்ளையடிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணம் மற்றும் நகைகளுடன் இருவர் கைது!

காரைநகரில் வெளிநாட்டினரின் வீடுகளைக் குறிவைத்த திருட்டு வழக்கில் இருவர் கைது; களவாடப்பட்ட டொலர்கள், நகைகள், கடவுச்சீட்டு மீட்பு. நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை.

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும், மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை மதிப்பிலான ஒரு இலட்சம் ரூபா என்பனவும் களவாடப்பட்டன.


இதுதொடர்பில் வீட்டின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறை விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருந்தது.


விசாரணையின் அடிப்படையில், காரைநகரைச் சேர்ந்த 20 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம், நகை என்பனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.


சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

KCSC Challengers Trophy 2026 - அம்பாள் அணிக்கு சாம்பியன் பட்டம்

காரைநகர் பிரதேச விளையாட்டு கழகத்தின் (KCSC) சார்பில் நடத்தப்பட்ட Challengers Trophy 2026 மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் அம்பாள் விளையாட்டுக் கழகம் சாம்பியன் பட்டத்தை வென்றது.

Jul 12, 2026

காரைநகர் அபிவிருத்தி சபையின் 2026ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம்

காரைநகர் அபிவிருத்தி சபையின் நிரந்தர தலைவர் தெரிவுக்கான பொதுக்கூட்டம் 12.07.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், முந்தைய தலைவர் திரு. குருபரன் சுப்பிரமணியம் தனிப்பட்ட காரணங்களினால் இரு தடவைகள் ராஜினாமா செய்ததையடுத்து, பதில் தலைவர் திரு. தேவலிங்கம் பரணீதரன் தலைமையில் நிர்வாகம் தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் எனத் தெரிகிறது - 2023ம் ஆண்டு அங்கத்தவர் கோரம் நிபந்தனையை பூர்த்தி செய்வது கடினமான சவாலாக உள்ளதால்.

Jul 12, 2026