பயன்பாட்டு விதிமுறைகள்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஜூலை 10, 2026
ஒப்புதல்
karaicity.com இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள். ஏற்கவில்லை எனில், இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டாம். கடையில் ஒரு பொருளை வாங்கும்போது, கீழே உள்ள கடை சார்ந்த விதிமுறைகளும் உங்களுக்குப் பொருந்தும்.
Using karaicity.com means you accept these terms. If you buy something from the shop, the shop clauses below apply to you as well.
நாங்கள் யார்
karaicity.com காரைநகர், யாழ்ப்பாணம், இலங்கை இலிருந்து இயக்கப்படுகிறது. இந்த விதிமுறைகள் இலங்கை சட்டத்தின்படி நடைமுறைப்படுத்தப்படும்.
karaicity.com is operated from Karainagar, Jaffna, Sri Lanka. These terms are governed by the law of Sri Lanka.
கடை - விலைகளும் கொள்வனவுகளும்
கடையின் அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (Rs) குறிக்கப்படுகின்றன. வேறு நாணயங்களில் காட்டப்படும் தொகைகள் தோராயமானவை மட்டுமே; உண்மையில் இலங்கை ரூபாயில்தான் கட்டணம் அறவிடப்படும். ஒரு கொள்வனவை ஏற்றுக்கொண்டதாக உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை அனுப்பும்போதுதான் ஒப்பந்தம் உருவாகிறது.
Prices are in Sri Lankan rupees. Any other currency shown is an approximation for guidance; you are charged in rupees. A contract is formed when we email to confirm the order, not when you place it. If a price or a stock level turns out to be wrong, we may cancel and refund you in full before dispatch.
அட்டை மூலம் செலுத்தும்போது, கட்டணம் முடியும் வரை உங்கள் பொருட்கள் 45 நிமிடங்களுக்கு ஒதுக்கி வைக்கப்படும். அந்த நேரத்திற்குள் கட்டணம் முடியாவிட்டால், அவை மீண்டும் விற்பனைக்கு வரும்.
Paying by card reserves your items for 45 minutes. If payment is not completed within that window the reservation lapses and the stock returns to sale.
கட்டணம்
அட்டைக் கட்டணங்கள் Stripe நிறுவனத்தின் பாதுகாப்பான பக்கத்தில் முழுமையாக நிறைவேற்றப்படுகின்றன. உங்கள் அட்டை இலக்கத்தை நாங்கள் ஒருபோதும் காண்பதுமில்லை, சேமிப்பதுமில்லை.
Card details are entered on Stripe’s own page. The card number never reaches our servers and is never stored by us.
காரைநகருக்குள் விநியோகிக்கப்படும் கொள்வனவுகளுக்கு மட்டுமே பணத்தைக் கையளிக்கும் முறை கிடைக்கும். வெளிநாட்டு முகவரிகளுக்கு அட்டைக் கட்டணம் மட்டுமே.
Cash on delivery is available only for addresses inside Karainagar. Every other destination is card only.
விநியோகம்
நாங்கள் அனுப்பும் நாடுகளின் பட்டியல் கட்டணப் பக்கத்தில் காட்டப்படுகிறது. விநியோகக் கட்டணம் சேருமிடத்தையும் பொதியின் எடையையும் பொறுத்தது; கொள்வனவு செய்யும் முன் அது காட்டப்படும்.
The countries we ship to are listed at checkout. The delivery fee depends on the destination and the weight of the parcel, and is shown to you before you pay.
வெளிநாட்டு கொள்வனவுகளுக்கான இறக்குமதி வரிகளும் சுங்கக் கட்டணங்களும் விலையில் அடங்கவில்லை. அவற்றை விநியோகிக்கும் நிறுவனம் உங்களிடம் தனியாக அறவிடும்.
Import duties and taxes are not included in the price. The courier collects them from you on delivery.
மாற்றீடும் பணத்திரும்பலும்
தவறான பொருள் வந்தால், பொருள் விடுபட்டிருந்தால், வழியில் சேதமடைந்தால், அல்லது ஒருபோதும் வந்து சேராவிட்டால் - அதை மாற்றித் தருவோம், அல்லது முழுத் தொகையையும் திருப்பித் தருவோம். ஒரு புகைப்படம் போதும்.
If the wrong item arrives, an item is missing, the parcel is damaged in transit, or it never arrives, we will replace it or refund you in full. A photograph is all we ask for.
பொருள் கிடைத்த 14 நாட்களுக்குள் எங்களுக்குத் தெரிவியுங்கள். பணம் நீங்கள் செலுத்திய அதே முறையில் திருப்பப்படும்; பணத்தைக் கையளித்திருந்தால், உங்களுடன் ஒப்புக்கொள்ளும் முறையில்.
Tell us within 14 days of delivery. Refunds go back to the method you paid with; for a cash-on-delivery order, by whatever means we agree with you.
மனம் மாறியதற்காகப் பொருட்களைத் திருப்பி ஏற்க முடியாது. உணவுப் பொருட்களையும் முத்திரை உடைக்கப்பட்ட பொருட்களையும், சேதமோ தவறோ இல்லாதவிடத்து, திரும்பப் பெற முடியாது.
We do not accept change-of-mind returns. Food items and anything with a broken seal cannot be returned unless it is faulty or damaged.
சேவைகள் - தையல், ஆரி வேலை, ஒப்பனை
தையல், ஆரி வேலை போன்ற சேவைகள் உங்களுக்காகவே தனிப்பட்ட முறையில் செய்யப்படுபவை. ஒரு கொள்வனவைப் போலல்லாமல், முதலில் நீங்கள் ஒரு கோரிக்கையை அனுப்புகிறீர்கள்; நாங்கள் தொடர்பு கொண்டு, அளவெடுத்து, விலையைச் சொல்கிறோம். எந்த வேலையும் தொடங்குவதற்கு முன் நீங்கள் அந்த விலைக்கு ஒப்புக்கொள்கிறீர்கள்.
Tailoring, aari work and the like are made for you personally. Unlike an order, you first send a request; we contact you, take measurements and agree a price. You approve that price before any work begins.
வேலை தொடங்கும் முன்பு, எந்தக் காரணத்திற்காகவும் இலவசமாக ரத்து செய்யலாம் - கட்டிய முன்பணம் முழுவதும் திரும்பக் கிடைக்கும். வேலை தொடங்கிய பிறகு (துணி வெட்டப்பட்ட, ஆரிச் சட்டம் அமைக்கப்பட்ட நிலையில்) ரத்து செய்ய விரும்பினால், அதுவரை பயன்படுத்திய பொருட்களின் செலவைத் தவிர மீதியை திருப்பித் தருவோம் - அந்தத் தொகையை நீங்கள் உறுதிசெய்யும் முன்பே உங்களுக்குத் தெரிவிப்போம்.
Before work starts, you may cancel for any reason at no cost - your advance is refunded in full. Once work has begun (fabric cut, an aari frame set), if you ask to cancel we refund the advance less the materials already used, and we tell you that figure before you confirm.
வேலை முடிந்து தயாரான பிறகு ரத்து செய்ய முடியாது. ஆனால் எங்கள் தவறாலோ, ஒப்புக்கொண்ட அளவுக்கோ வடிவத்திற்கோ மாறாக இருந்தால், அதை மீண்டும் செய்து தருவோம் அல்லது முழுத் தொகையையும் திருப்பித் தருவோம்.
Once the piece is finished it cannot be cancelled. But if it is wrong because of us - not the measurements or design we agreed - we will remake it or refund you in full.
சேவைகளுக்கு பொதுவாக முன்பணம் (சுமார் பாதி) வேலை தொடங்கும் முன் அறவிடப்படும்; மீதித் தொகை பொருள் தயாரானதும். காரைநகருக்குள் விநியோகிக்கப்படும்போது மீதியை பணமாகச் செலுத்தலாம்.
Services usually take an advance (about half) before work begins, with the balance once the piece is ready. Within Karainagar the balance may be paid in cash on delivery.
உள்ளடக்க உரிமை
karaicity.com-இல் வெளியிடப்படும் கட்டுரைகள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் பிற உள்ளடக்கங்களின் பதிப்புரிமை karaicity.com அல்லது அசல் படைப்பாளிகளுக்கு உரியது.
- தனிப்பட்ட பயன்பாட்டிற்கு உள்ளடக்கத்தைப் படிக்கலாம், பகிரலாம்.
- வணிக நோக்கங்களுக்காக மீள்பிரசுரிக்க முன்அனுமதி பெற வேண்டும்.
- சமூக வலைதளங்களில் பகிரும்போது karaicity.com-ஐ மூலமாகக் குறிப்பிடுங்கள்.
பயனர் நடத்தை
இணையதளத்தைப் பயன்படுத்தும்போது பின்வருவனவற்றை செய்யக் கூடாது:
- தவறான அல்லது அவதூறான தகவல்களைப் பரப்புதல்
- இன, மத அல்லது சாதி அடிப்படையிலான வெறுப்பூட்டும் பேச்சு
- பிறரின் தனியுரிமையை மீறுதல்
- இணையதளத்தின் தொழில்நுட்பச் செயல்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிகள்
- உண்மையல்லாத பெயரிலோ முகவரியிலோ கொள்வனவு செய்தல்
செய்தி மற்றும் திருத்தங்கள்
நம்பகமான செய்திகளை வழங்க அதிகபட்ச முயற்சி எடுக்கிறோம். எனினும் செய்திகளின் முழுத் துல்லியத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.
- செய்திகள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே.
- கருத்துக் கட்டுரைகள் எழுதியவரின் தனிப்பட்ட கருத்துகளே.
- பிழையைக் கண்டால் தெரிவியுங்கள் - உடனடியாகத் திருத்துவோம்.
விளம்பரங்களும் வெளிப்புற இணைப்புகளும்
விளம்பரங்களின் உள்ளடக்கத்திற்கும் உண்மைத்தன்மைக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பு; அவை எங்கள் ஆசிரியக் கொள்கையைப் பாதிக்காது. மூன்றாம் தரப்பு இணையதளங்களின் உள்ளடக்கத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.
பொறுப்புத் துறப்பு
இணையதளம் “உள்ளபடியே” வழங்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியான கிடைக்கும் தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் நீங்கள் கொள்வனவு செய்த பொருள் தொடர்பான எங்கள் பொறுப்பை இது குறைக்காது - மேலே உள்ள பணத்திரும்பல் உறுதிமொழி நிற்கிறது.
The site is provided “as is” and we cannot guarantee it is always available. Nothing in this clause reduces what we owe you for an order: the refund promise above stands.
விதிமுறை மாற்றங்கள்
இந்த விதிமுறைகளை அவ்வப்போது புதுப்பிக்கலாம். நீங்கள் கொள்வனவு செய்த தினத்தில் நடைமுறையில் இருந்த விதிமுறைகளே அந்த கொள்வனவுக்குப் பொருந்தும்.
We may update these terms. The version in force on the day you place an order is the one that governs that order.
கேள்விகள், பிழைகள், பணத்திரும்பல் கோரிக்கைகள்: hello@karaicity.com