தனியுரிமைக் கொள்கை
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஜூலை 10, 2026
சுருக்கமாக
செய்திகளைப் படிக்க உங்களிடம் எதுவும் தேவையில்லை - கணக்கும் வேண்டாம். ஒரு பொருளை வாங்கும்போது மட்டுமே, அதை உங்களிடம் சேர்ப்பதற்குத் தேவையான தகவல்களைக் கேட்கிறோம். உங்களைப் பின்தொடரும் எந்தக் கருவியையும் நாங்கள் பயன்படுத்துவதில்லை.
You need nothing to read the news - not even an account. We ask for personal details only when you buy something, and only what is needed to get the parcel to you. We run no analytics and no advertising trackers of any kind.
நாங்கள் சேகரிப்பவை
ஒரு கொள்வனவைச் செய்யும்போது:
- உங்கள் பெயர், தொலைபேசி இலக்கம், விநியோக முகவரி
- மின்னஞ்சல் முகவரி - கொள்வனவு நிலையை அறிவிக்க
- கொள்வனவின் உள்ளடக்கம், தொகை, விநியோகிப்பவருக்கான குறிப்பு
கணக்கு ஒன்றைத் தொடங்கினால், உங்கள் மின்னஞ்சல் முகவரியும், உங்கள் கொள்வனவுகளுடன் அதன் தொடர்பும் மட்டுமே சேமிக்கப்படும். கடவுச்சொல் இல்லை.
If you open an account we store your email address and its link to your orders. There is no password: we email you a link that works once and expires in fifteen minutes.
நாங்கள் ஒருபோதும் சேகரிக்காதவை
உங்கள் அட்டை இலக்கம். அட்டைக் கட்டணம் முழுவதும் Stripe நிறுவனத்தின் சொந்தப் பக்கத்தில் நடைபெறுகிறது. அந்த இலக்கம் எங்கள் கணினிகளை ஒருபோதும் தொடுவதில்லை.
Your card number. Card payment happens entirely on Stripe’s own page; the number never touches our servers, so we could not store it even if we wanted to.
Cookies
ஒரே ஒரு Cookie மட்டும் - நீங்கள் கணக்கில் நுழையும்போது வைக்கப்படும் அமர்வு Cookie. அது 30 நாட்களில் காலாவதியாகும். வெளியேறினால் உடனே நீங்கும். விளம்பரம் அல்லது கண்காணிப்புக்கான Cookies எதுவும் இல்லை.
One cookie, and only if you sign in: a session cookie that expires after 30 days and is deleted the moment you sign out. No advertising or tracking cookies at all, so there is no consent banner to dismiss.
உங்கள் கூடையின் உள்ளடக்கம் உங்கள் உலாவியிலேயே தங்குகிறது. கட்டணப் பக்கத்தில் கொள்வனவைச் செய்யும் வரை அது எங்களை வந்தடைவதில்லை.
Your cart lives in your own browser. It does not reach us until you place the order.
யாருடன் பகிரப்படுகிறது
- Cloudflare - இணையதளம், தரவுத்தளம், மின்னஞ்சல் அனுப்புகை.
- Stripe - அட்டைக் கட்டணங்கள்.
- விநியோகிக்கும் நிறுவனம் - பொதியைச் சேர்ப்பதற்குத் தேவையான பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மட்டும்.
இதைத் தவிர வேறு யாருக்கும் உங்கள் தகவல்களை விற்பதில்லை, வாடகைக்கு விடுவதில்லை, பகிர்வதில்லை.
Beyond these, your details are never sold, rented, or shared. The courier receives only the name, address and phone number needed to deliver the parcel.
எவ்வளவு காலம்
- கொள்வனவுகளும் விலைப்பட்டியல்களும் - கணக்கியல் தேவைக்காக வைக்கப்படும்.
- நுழைவு இணைப்பு - 15 நிமிடங்கள், அல்லது ஒருமுறை பயன்படுத்தும் வரை.
- அமர்வு - 30 நாட்கள்.
உங்கள் உரிமைகள்
- உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருப்பதை அறியக் கோரலாம்.
- தவறான தகவலைத் திருத்தக் கோரலாம்.
- உங்கள் கணக்கையும் தகவல்களையும் நீக்கக் கோரலாம் - கணக்கியல் சட்டம் வைத்திருக்கக் கோரும் கொள்வனவுப் பதிவுகளைத் தவிர.
Write to us and we will tell you what we hold, correct it, or delete it - save for the order records that accounting law requires us to keep.
குழந்தைகள்
இந்தக் கடை பெரியவர்களுக்கானது. 16 வயதுக்குட்பட்டவர்களிடமிருந்து அறிந்தே தகவல்களைச் சேகரிப்பதில்லை.
கொள்கை மாற்றங்கள்
இந்தக் கொள்கையை அவ்வப்போது புதுப்பிக்கலாம். முக்கிய மாற்றங்கள் இந்தப் பக்கத்தில், மேலே உள்ள தேதியுடன் அறிவிக்கப்படும்.
தனியுரிமை தொடர்பான கேள்விகள்: hello@karaicity.com